யாழில் சிறுமி எடுத்த தவறான முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் குடும்பம்

யாழில் சிறுமி எடுத்த தவறான முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் குடும்பம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து நேற்று உயிர் மாய்த்துள்ளார்.

மூளாய் - ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

யாழில் சிறுமி எடுத்த தவறான முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் குடும்பம் | A Young Girl In Jaffna Loses Her Life

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி நேற்று காலை சுருக்கிட்டுள்ளார். இதை அவதானித்த தாயார் கயிற்றினை அறுத்துள்ளார்.

பின்னர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்து திரும்பி சென்றது.

சிறுமியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.