யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த இளைஞர்கள் ; சந்தேக நபர் கைது

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த இளைஞர்கள் ; சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் கள்ளுத் தவறணையில் வைத்து இருவரால் தாக்குதல்களுக்கு உள்ளானார்.

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த இளைஞர்கள் ; சந்தேக நபர் கைது | Youth Who Took The Life Of A Family Man In Jaffna

தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இலங்கை அவர்மீது தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.