யாழில் சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கடலட்டைப் பண்ணையில் சம்பவம்

யாழில் சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கடலட்டைப் பண்ணையில் சம்பவம்

யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழில் சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கடலட்டைப் பண்ணையில் சம்பவம் | Tragic Incident Shakes Jaffna Communityகுறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.