யாழில் சைக்கிளில் சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழில் சைக்கிளில் சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வட்டு வடக்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி நாகேந்திரம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் சைக்கிளில் சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு | Elderly Man Dies Collapsing While Riding Bicycle

குறித்த நபர் நேற்று (21.11.2025) பிற்பகல் கேணியடி, பிளவத்தை பகுதிக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இதன்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.