யாழில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை
யாழில் நபரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் நேற்று மாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் தவறணையில் அவர் இருந்த போது இளைஞர்கள் இருவர் குறித்த குடும்பஸ்தரை தாறுமாறாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.