ரகசிய உறவு ; முத்தம் கொடுத்த காதலனின் உதட்டை கடித்து துப்பிய காதலி !

ரகசிய உறவு ; முத்தம் கொடுத்த காதலனின் உதட்டை கடித்து துப்பிய காதலி !

முத்தம் கொடுக்க முயன்ற  முன்னாள் காதலனின் உதட்டை கடித்து துப்பிய  சம்பவம்  ஒன்று இந்தியாவின் உத்த்ர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

 சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருகையில்,

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாம்பி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அதேவேளை, சாம்பிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே  ரகசிய உறவு இருந்து வந்ததாக  கூறப்படுகின்றது.

ரகசிய உறவு ; முத்தம் கொடுத்த காதலனின் உதட்டை கடித்து துப்பிய காதலி ! | Man Tries Forcibly Kiss Ex Girlfriend Bites Lips

 இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் பெற்றோர் வெறொரு நபருடன் திருமணம் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதனால் கள்ளக்காதலை முறித்துக்கொள்ளும்படி சாம்பியிடம்   பெண் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்கமறுத்த சாம்பி தன்னுடன் தொடர்ந்து  உறவில்  இருக்கும்படி   பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இளம்பெண் செவ்வாய்க்கிழமை (18) அன்று மதியம் கிராமத்தில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த   சாம்பி இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து  அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் முத்தம் கொடுக்க வந்த  சாம்பியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். இதில், சாம்பியின் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது.

 அதிர்ச்சியடைந்த சாம்பி வலியில் அலறி துடித்துள்ளார். சாம்பியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன்   சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.