யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை

யாழில் (Jaffna) இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை | Men From France Killed In Jaffna

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்