செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு தண்டம்

செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு தண்டம்

யாழ்ப்பாணம் தொண்மானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு, உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பானிப்பூரி விற்பனை செய்தவருக்கும், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவக உரிமையாளருக்கும் எதிராக வல்வெட்டித்துறை பொது சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு தண்டம் | Selva Shannidhi Temple Environment Finend

வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, தம் மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த நீதிமன்று, இருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.