பலாலி விமான நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்!

பலாலி விமான நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்!

சுவிஸ் நாட்டல் வசித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்த முடியாது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் சுவிஸ் தமிழ் பொருளாதாக மேம்பாட்டு நிறுவனம் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

குறித்த சந்திப்பில், "சுவிஸ் நாட்டிற்கு ஈழத்தமிழ் மக்கள் சென்று, கிட்டத்தட்ட 40 வருடங்கள் கடந்துள்ளன. 

இந்த 40 வருடங்களில், ஒரு சமூக கட்டமைப்பில் கலை உள்ளிட்ட பல்வேறு ரீதியில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அவற்றின் ஊடாக மக்களை வழிநடத்தினர் எமது முன்னோர். 

இந்நிலையில், இங்குள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு பலாலி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது உள்ளது” என குறித்த அமைப்பினர் குறிப்பிட்டனர்.