அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளிவந்த தகவல்

அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் பொதுத் தேர்தல் நடைபெற்று மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன வரலாற்று ரீதியான மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.

இந்த நிலையில் செழிப்பான எதிர்காலத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கக் கூடியவர்களுக்கு கொள்கைகளை அடிப் படையாக வைத்தே அமைச்சுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஹம்பாந்தோட்டையில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சுப் பதவிகளைத் தான் பெறுவதற்கு முன்னர், தனது தந்தைக்காக முன்னின்றவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நாமல் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக எம்முடன் 53 பேர் இருந்தனர். அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் பணத்திற்கு அடிபணியாமல், வீதியில் இறங்கி, மஹிந்தவுடன் 53 பேர் இருந்தனர்.

அவர்களுக்கு நியாயம் கிடைத்த பின்னர் தலைவர் களுடன் என்னால் பேச முடியும். மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல. கொள்கைகளை அடிப்படையாக வைத்தே அமைச்சுகள் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.

விஞ்ஞானபூர்வமாக, நல்லாட்சி அரசாங்கம் பகிர்ந்தளித்தது போன்று அல்ல. சரியான முறைப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.