யாழில் காவல்துறையினரால் சுடப்பட்ட இளைஞர்: எழுந்த கடும் கண்டனம்

யாழில் காவல்துறையினரால் சுடப்பட்ட இளைஞர்: எழுந்த கடும் கண்டனம்

சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என காவல்துறையினர் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், “சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்றார் என 18 வயதான உழவு இயந்திர சாரதி மீது காவல்துறையினர் கண் மூடி தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழில் காவல்துறையினரால் சுடப்பட்ட இளைஞர்: எழுந்த கடும் கண்டனம் | Srikanda Slams Police Over Illegal Shooting

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு ஒரு வரையறை உண்டு.

அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டே சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

சட்டத்தின் எல்லைகளை தாண்டி சட்டவிரோதமான முறையில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது.   

யாழில் காவல்துறையினரால் சுடப்பட்ட இளைஞர்: எழுந்த கடும் கண்டனம் | Srikanda Slams Police Over Illegal Shooting

சட்டவிரோதமான முறையில், மணலை ஏற்றி சென்றார் என்றால் அதனை நிறுத்த காவல்துறையினருக்கு பல வழிகள் உண்டு.

இறுதியாக வாகன சில்லுகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கலாம்.

இருப்பினும், காவல்துறையினர் வாகனத்தின் சில்லுகளை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளாது, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  

மனித உயிர்கள் பெறுமதியானவை, அவற்றை கண்மூடி தனமாக துப்பாக்கி சூடுகள் நடாத்தி பறிக்க அனுமதிக்க முடியாது.

யாழில் காவல்துறையினரால் சுடப்பட்ட இளைஞர்: எழுந்த கடும் கண்டனம் | Srikanda Slams Police Over Illegal Shooting

எனவே இந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் தேவை அதற்கு காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும்.

நீதியை மறைக்காது, விசாரணைகளுக்கு காவல்துறையினர் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.