இலங்கையில் திருமணங்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ; வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் திருமணங்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ; வெளியான அதிர்ச்சி தகவல்

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1,39,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன.

இலங்கையில் திருமணங்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ; வெளியான அதிர்ச்சி தகவல் | Sharp Decline In Number Of Marriages In Sri Lanka

2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1,71,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தரவுகளின்படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 2,20,761 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 3,01,706 பிறப்புகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.