தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது.

அதற்கமைய, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது.

உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாயாக உயர்ந்தது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | Gold Rate Falls Down In Sri Lanka Gold Pirce

எனினும் நேற்று, செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 330,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது.

அதற்கமைய, நேற்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலை மேலும் 10,000 ரூபாயாக குறைந்துள்ளது.