கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை! அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்கு செல்லும் குழு
கல்வி அமைச்சின் குழுக்கள் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்கு சென்று கண்காணிப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் நிர்வாகங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலேயே இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
கை கழுவும் வசதிகள் உட்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பில் அந்தக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை பாடசாலைகளுக்கென்று பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் உடல் வெப்பமானிகளை கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.
இதன்படி 200 மாணவர்களுக்கு ஒரு உடல் வெப்பமானியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.