இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 3,200 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கோட்டை மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் மொத்த விலை 1,900 ரூபாவில் இருந்து 2,000 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், சந்தைகளில் சில்லறை விலை 2,800 ரூபா முதல் 3,200 ரூபா வரை பதிவாகியுள்ளது.

அதேசமயம் பிரபல பல்பொருள் அங்காடிகளில் தேசிக்காய் ஒரு கிலோ  கிராமின் விலை 2,500 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை | Lime Price In Sri Lanka Today

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நேற்றையதினம் தேசிக்காயின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள விலைப் பட்டியலின் ஊடாக அறிய முடிகின்றது.

அத்துடன், ஒரு தேசிக்காயினுடைய விலை சந்தையில் 50 ரூபாவிற்கும் அதிகமாக காணப்படுவதாவும், சந்தைக்கு தேசிக்காயின் வரத்து குறைவடைந்து காணப்படுகின்றமைமே குறித்த விலை அதிகரிப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.