
தமிழர் பகுதி விகாரையில் தங்கியிருந்த தென்னிலங்கை இளைஞனின் மோசமான செயல்
மட்டக்களப்பு பகுதியில் விகாரை ஒன்றில் தங்கியிருந்து கல்லடி பாலம் அருகில் கடலை வண்டியில் வியாபாரம் செய்து வந்த கடுகன்னாவைச் சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவரை 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அதே விகாரையில் தங்கி வேலை செய்து வந்த அல்பிட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை 170 மில்லிகிராம் ஹெரோயின் உடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.