யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண பொறுப்பேற்பு

யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண பொறுப்பேற்பு

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பாலித செனவிரட்ண யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.