திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக அதனை திருடியதாக தெரிய வந்துள்ளது

திருடப்பட்ட பித்தளை விளக்கின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்

வீடுகளில் இருந்து பழைய பொருட்களை சேகரிக்கும் குழுவொன்று லொரியில் வட்டரேகா பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல் | 3 Thieves Arrested For Raise Money For Marriage

இதன் போது வட்டரெக்க, மாவதகமவில் உள்ள விகாரைக்கு சென்ற மூவரில் ஒருவர் விகாரையின் தேரருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ​​மற்ற இருவரும் பித்தளை விளக்கைத் திருடியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த விளக்கு நாரம்மல பகுதியில் உள்ள ஒரு பழைய உலோகக் கடைக்கு விற்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் திருமணத்திற்கு பணம் திரட்டும் நோக்கில் இந்தத் திருட்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.