
திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல இருந்த நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (7) மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் திருமண நிகழ்வு ஒன்றுக்காக இந்தியா செல்ல யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணத்துக்கு புறப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் கடவுச்சீட்டு பரிசோதனை செய்த அதிகாரிகள் குறித்த நபரை தடுத்து வைத்து விமான நலைய பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.