
யாழில் பரிதாபமாக பறிபோன சிறுமியின் உயிர்! ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர்
யாழ் (Jaffna) - கேரதீவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் நேற்று (28.09.2025) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18 ஆவது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி - மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தில் செலுத்துனரும், பின்னால் அமர்ந்து சென்ற அவரது உறவினரான சிறுமியும் பலத்த காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.