யாழில் 10 காணி உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழில் 10 காணி உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுச் சூழலைப் பேணியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொண்டைமானாறு வல்வெட்டித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு நோய் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழில் 10 காணி உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Court Issues Shock Ruling For 10 Jaffna Landownersஇதன்போது குறித்த பகுதியில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் சுற்றுச் சூழலைப் பேணிய 10 காணி உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், குறித்த 10 காணி உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் நீதிமன்றால் அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.