நண்பர்களுடன் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் ; ஸ்தலத்தியே பிரிந்த உயிர்
ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் திஸ்மல்பொல ரயில் நிலையத்திற்கு நண்பர்களுடன் குறித்த சிறுவன் சென்றுள்ளார்.
இதன்போது, ரயில் கடவையில் இறங்கி அடுத்து ரயில் மேடைக்கு செல்லும் போது பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயில் மோதியது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.