யாழில் தியாக தீபத்தின் ஊர்திக்கு முன் வெடி கொளுத்திய இளைஞன் கைது

யாழில் தியாக தீபத்தின் ஊர்திக்கு முன் வெடி கொளுத்திய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை நகரை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞனை கைது செய்யுமாறு தவிசாளர் பொலிசாரினை கோரியதை அடுத்து இளைஞன் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், "திலீபன் வழியில் வருகிறோம்" என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் தியாக தீபத்தின் ஊர்திக்கு முன் வெடி கொளுத்திய இளைஞன் கைது | Youth Explosives Torchlight Procession Jaffna

தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதிக்கு வருகை தந்திருந்தது.

இதன் போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்லஸ் போல் மற்றும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபன் அவர்களின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் இதன் போது பருத்தித்துறை நகரபகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரால் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொளுத்தி அஞ்சலி செலுத்த வந்தோருக்கு இடையூறாக செயற்பட்டார் என பருத்தித்துறை நகர சபை தவிசாளர் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.

யாழில் தியாக தீபத்தின் ஊர்திக்கு முன் வெடி கொளுத்திய இளைஞன் கைது | Youth Explosives Torchlight Procession Jaffna