அமெரிக்கா சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

அமெரிக்கா சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (23) அந்நாட்டு நேரப்படி காலை 8.50 மணிக்கு அமெரிக்காவின் ஜோன் எப். கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அமெரிக்காவில் உள்ள ஜோன் எப். கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சந்தரசிறி ஜெயசூரிய உள்ளிட்டோரினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

அமெரிக்கா சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க | President Anura Arrives In The United States

இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இணைந்துள்ளார்.