உலகில் வேறு எங்கும் கண்டதில்லை; வெளிநாட்டு தம்பதியால் பெருமைகொள்ளும் இலங்கை!
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள புகைப்படமொன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னர் காணப்படும் வீதி சமிக்ஞையில் முன்னால் யானைகள் வரும் பாதை என விளக்கமளிக்கும் குறியீடு உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற குறியீட்டை நாம் உலகில் வேறு எங்கும் கண்டதில்லை என வெளிநாட்டு தம்பதி பதிவிட்டுள்ளனர்.
இலங்கை , இந்தியா , தாய்வான் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளில் யானைகளை புனிதமானதாக கருதப்படும் வழங்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.