யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை | Heavy Rain Weather Forecast For The Next 24 Hours

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் யாழில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கன மழை பெற்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.