யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; ஐந்து பேருக்கு நேர்ந்த கதி

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; ஐந்து பேருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் - மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக வந்த உந்துருளியுடன் மோதியது.

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; ஐந்து பேருக்கு நேர்ந்த கதி | Accident Two Wheeler Three Motorcycles Jaffna

பின்னர் அந்த உந்துருளி நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு உந்துருளிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கியவர்களில் ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.