வரலாறு காணாத வகையில் அதிகரித்த இலங்கை தங்க விலை..!
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்க விலையில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், இன்று(09) அதன் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 39,000 ரூபாவாகவும் 1 பவுன்(8 கிராம்) 312,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 35,750 ரூபாவாகவும் 1 பவுன் 286,000 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராம் 34,130 ரூபாவாகவும் 1 பவுன்(8 கிராம்) 273,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தை நிலவரப்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி 1,105,498 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.