யாழ் உரும்பிராயில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

யாழ் உரும்பிராயில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் (09) விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உந்துருளியும், மகிழுந்தும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ் உரும்பிராயில் இன்று இடம்பெற்ற கோர விபத்து | Accident Occurred Today In Urumpirai Jaffna

இதன்போது உந்துருளி மற்றும் மகிழுந்து என்பன பகுதியளவில் சேதமடைந்ததுடன் உந்துருளியில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.