தமிழர் பகுதி ஒன்றில் கஞ்சாவுடன் குடும்ப பெண் கைது

தமிழர் பகுதி ஒன்றில் கஞ்சாவுடன் குடும்ப பெண் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதி ஒன்றில் கஞ்சாவுடன் குடும்ப பெண் கைது | Family Woman Arrested With Ganja In Tamil Area

முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். அடசூரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்படி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பின்னர் அவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.