மாணவிகள் விடுதியில் நடந்த மோசமான செயல் ; கைதான இளம்பெண்கள்

மாணவிகள் விடுதியில் நடந்த மோசமான செயல் ; கைதான இளம்பெண்கள்

ஜார்கண்டில் மாணவிகள் தங்கும் விடுதியையே விபசார மையமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் செயல்பாடு பொலிசாரின் திடீர் சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் நெடுஞ்சாலையோரம் இருந்த ஆறு தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக  தகவல் கிடைத்ததையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

மாணவிகள் விடுதியில் நடந்த மோசமான செயல் ; கைதான இளம்பெண்கள் | Young Women Arrested In Large Numbers

அப்போது விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குரிய நிலையில் இருந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, விடுதி மேலாளர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஞ்சி நகரின் லால்பூர் பகுதியில் அமைந்துள்ள ‘மாணவிகள் தங்கும் விடுதி’-யில் விபசாரத் தொழில் நடைபெற்று வருவதாகக் பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த விடுதியில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் போது, 10 இளம்பெண்கள் உட்பட 11 பேர் பிடிபட்டனர்.