கோவில் திருவிழாவில் அனர்த்தம் : பட்டாசு வெடித்து குடும்பஸ்தர் மரணம்!

கோவில் திருவிழாவில் அனர்த்தம் : பட்டாசு வெடித்து குடும்பஸ்தர் மரணம்!

திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (06) இடம் பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை காளிராசா (வயது45) என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதை கண்டு அதனை காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவில் திருவிழாவில் அனர்த்தம் : பட்டாசு வெடித்து குடும்பஸ்தர் மரணம்! | Family Member Dies In Firecracker Explosion

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.