யாழில் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு

யாழில் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இணையதள வசதி அண்மைக்காலமாக மந்தமான நிலையில் காணப்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று ஆழியவளையில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

யாழில் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு | Construction Of Telecommunications Tower In Jaffna

தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இதனை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குடும்பஸ்தர் ஒருவர் இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை இதில் நிறுவுவதால் கதிர்வீச்சால் தாம் மேலும் பாதிக்கப்பட்டு, உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் தமது பகுதியில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்க வேண்டாம் என பிரதேச செயலகம், பிரதேச சபையிடம் கடிதம் மூலம் முறைப்பாடளித்துள்ளார்

சம்பவ இடத்திற்கு நேற்று வருகை தந்த பருத்தித்துறை பிரதேச சபை அதிகாரிகள் குறித்த தொலை தொடர்பு கோபுரம் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்படுவதை சுட்டிக்காட்டி உரிய முறையில் அனுமதி பெற்ற பின் பணிகளை தொடருமாறும் அதுவரை பணிகளை இடைநிறுத்து மாறும் அறிவுறுத்தல் வழங்கி சென்றுள்ளனர்.