இதில் எந்த குற்றமும் கண்டதில்லை – வாரிசு நடிகர்கள் குறித்து சுருதி கருத்து!
“நான் எனது அப்பா கமல்ஹாசனின் தயவால் தான் சினிமாவுக்கு வந்தேன். இதில் எவ்வித குற்றமும் நான் கண்டதில்லை” என நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் வாரிசு நடிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், சுருதி ஹாசன் மேற்படி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ நான் தமிழில் முதன்முதலில் அறிமுகமான படம் ஏழாம் அறிவ. இந்த படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்தேன். நடிகர் சூர்யாவும், அவரது அப்பா சிவக்குமாரின் மூலமாகவே திரைத்துறைக்கு வந்தவர்.
ஆனால் அவர் இங்கு தனது கடின உழைப்பை தந்ததால் அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். சினிமாவில் நுழைவதற்கு மட்டுமே நாங்கள் எங்களது பெற்றோரின் தயவை பயன்படுத்தினோம்.
அதற்கு பிறகு தங்களது சொந்த முயற்சியால் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளோம். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இந்த நடைமுறையே உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்