
ரணிலை பார்வையிட வைத்தியசாலை சென்ற ஹரிணி அமரசூரிய?
கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றும் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் ரணிலை வைத்தியசாலையில், ஞாயிற்றுக்கிழமை (24) பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த செய்தி போலியானது என பிரதமர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.