மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா ; ஆபாச படம் எடுத்த வைத்தியரால் அதிர்ச்சி

மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா ; ஆபாச படம் எடுத்த வைத்தியரால் அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே அரச மருத்துவமனையில் கழிவறையில் ரகசிய கேமரா மறைத்து வைத்து ஆபாச படம் எடுத்த மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான மருத்துவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா ; ஆபாச படம் எடுத்த வைத்தியரால் அதிர்ச்சி | Doctor Caught Camera Hospital Bathroom Australia

 மருத்துவமனையின் கழிவறையில் இரகசியமான முறையில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பெண் வைத்தியர் கண்டறிந்தனர். இது குறித்து மருத்துவமனையின் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா ; ஆபாச படம் எடுத்த வைத்தியரால் அதிர்ச்சி | Doctor Caught Camera Hospital Bathroom Australia

அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (வயது 28) என்ற வைத்தியர் இரவு நேரத்தில் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். சிங்கப்பூர் வம்சாவளியை சேர்ந்தவரான அவரை பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவருடைய சல்லாப புத்தி காரணமாக மருத்துவமனையின் கழிவறையில் ரகசியமான முறையில் கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

2021-ம் ஆண்டு பயிற்சி வைத்தியராக பணியில் சேர்ந்ததில் இருந்து இதில் ஈடுபட்டுள்ளார். அவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த 4,500 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.

அவர் கைது செய்யப்பட்டநிலையில் அவருடைய சிங்கப்பூர் கடவுச்சீட்டுனை முடக்கினர். தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன்பேரில் அவரை பிணையில் விடுவிக்கப்பட்டார்