காதலியின் அந்தரங்க வீடியோ ; காதலனுக்கு விளக்கமறியல்

காதலியின் அந்தரங்க வீடியோ ; காதலனுக்கு விளக்கமறியல்

தனது காதலியின் நிர்வாண வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்வதாக மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இளைஞனை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சிறிது காலமாக காதல் உறவில் இருந்துள்ளதுடன் இதன்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் போது காதலியின் அனுமதியுடன் அதை காணொளியாக பதிவு செய்துள்ளார் .

காதலியின் அந்தரங்க வீடியோ ; காதலனுக்கு விளக்கமறியல் | Girlfriend Private Video Boyfriend Remandedபின்னர் வாட்ஸ் அப் மூலம் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறியதாக பெண்ணை மிரட்டியுள்ளார்.

சந்தேக நபரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உதயங்க முனவீர, இந்த வீடியோக்கள் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டதாகவும், தனது வாடிக்கையாளரை ஜாமீனில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதவான், பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.