12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரங்குளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (15.08.2025) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கியுள்ளார். 

12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு | 12 Year Old Boy Drowns In Water

அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரங்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.