கொழும்பு –அவிசாவளை பழைய வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவுறுத்தல்

கொழும்பு –அவிசாவளை பழைய வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவுறுத்தல்

கொழும்பு – அவிசாவளை பழைய வீதியில் இன்று மற்றும் நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

நவகமுவ விகாரையில் முன்னெடுக்கப்படும் பெரஹர ஊர்வலத்தை முன்னிட்டு இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு –அவிசாவளை பழைய வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவுறுத்தல் | Instruct Drivers Using Colombo Avisawala Old Roadஇன்று இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 2.30 வரையிலும் நாளை காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரையும் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு – அவிசாவளை பழைய வீதி, வெலே சந்தி மற்றும் ரனால சந்தி வரை மூடப்படுவதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.