
தவறு நடந்ததை மதிப்பீடு செய்ய வேண்டும்: ஜே.வி.பி
நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனமைக்கான தவறு குறித்து மதிப்பீடு செய்ய வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தவறு என்ன என்பதை நாங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
மேலும் ஊழல் அரசியல்வாதிகளின் பல தவறான செயல்களை நாங்கள் அம்பலப்படுத்திய பிறகும் மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால் எம்மால் எதனையும் செய்ய முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இக்கட்சி, மொத்தமாக நான்கு இலட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இது மொத்த வாக்குகளில் 3.84 வீதமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.