இந்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை தமிழ் யுவதி

இந்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை தமிழ் யுவதி

மன்னாரில் இருந்து பெண் ஒருவர்  கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.

இந்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை தமிழ் யுவதி | Sri Lankan Tamil Young Woman Shocks Indian Police

இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராவல் பேக்குடன் நின்றிருப்பதாக அப்பகுதி மீனவ மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை மாவட்டம், ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் தப்பிவந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் அப்பெண்ணை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதில், தலைமன்னாரில் இருந்து  நள்ளிரவு கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு அதிகாலையில் அரிச்சல்முனை வந்திறங்கியது தெரியவந்தது. படகுக்கு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பிவந்து தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தற்போது தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.