புதிய கல்வி சீர்திருத்தங்கள்! பௌத்த சங்க சபை கூட்டத்தில் எச்சரிக்கை
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தற்போதைய முறையில் நடைமுறைபடுத்தப்பட்டால், அது, நாட்டின் எதிர்கால தலைமுறைகளுக்கும் தற்போதைய அரசுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பேராசிரியர் வண. இந்துரகரே தம்மரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பௌத்த சங்க சபை கூட்டத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கல்வி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு முன் விரிவான கலந்துரையாடல்கள், நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் அனுபவமுள்ள நிர்வாகிகளின் கருத்துகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நாட்டின் மிகப்பெரிய நெருக்கடியாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.