சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகள் உள்ளிட்ட 8 சுகாதார நிறுவனங்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய அனுபவங்களின்படி, உலக வங்கியால் செய்யப்பட்ட ஆரம்ப மதிப்பீடு மற்றும், விரிவான மதிப்பீட்டில் சுமார் 10% மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.