நிர்வாணமாக சைக்கிளில் சென்ற நபரின் காணொளியால் சர்ச்சை

நிர்வாணமாக சைக்கிளில் சென்ற நபரின் காணொளியால் சர்ச்சை

கந்தானை நகரின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் நபர் ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் வாகனம் ஒன்றின் டேஷ்போர்ட் கமராவில் பதிவானதை அடுத்து பொதுமக்களின் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

நிர்வாணமாக சைக்கிளில் சென்ற நபரின் காணொளியால் சர்ச்சை | Man Caught On Camera Riding Bicycle

சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு நிர்வாணமாக பயணித்துள்ளார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம்,  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்  அந்த நபரை அடையாளம் காணவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் வீடியோ காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.