
காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தையும் காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (03) காலை 6.00 மணியளவில் சிறுமி தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை என்பதால், சிறுமி தனது தந்தையுடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காட்டு யானை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.