பெரும் துயரை ஏற்படுத்திய 11 வயது மாணவியின் மரணம் ; நடு வீதியில் நடந்த சோகம்

பெரும் துயரை ஏற்படுத்திய 11 வயது மாணவியின் மரணம் ; நடு வீதியில் நடந்த சோகம்

கெகிராவ  பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கெகிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நேற்று (01) பாடசாலை முடிந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல பள்ளி பேருந்து வரும் வரை வீதியோரத்தில் காத்திருந்தபோது மயங்கி விழுந்துள்ளார்.

பெரும் துயரை ஏற்படுத்திய 11 வயது மாணவியின் மரணம் ; நடு வீதியில் நடந்த சோகம் | 11 Year Old Girl S Death Shocks The Publi

வீதியில் மயங்கி விழுந்த மாணவியை, பாடசாலை பேருந்து மூலம் கெகிராவ மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் இருந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி  பெற்று, மேலதிக கல்விக்காக கெகிராவ பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையொன்றில் சேர்ந்துள்ளார். 

உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.