நாட்டில் வலுவான கட்சி பொதுஜன பெரமுன – பிரசன்ன

நாட்டில் வலுவான கட்சி பொதுஜன பெரமுன – பிரசன்ன

ஒரு வலுவான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சி மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொதுத் தேர்தலின் மூலம் பொதுஜன பெரமுன நாட்டின் வலிமையான அரசியல் கட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களுக்காகவும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் பொதுமக்கள் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இரண்டாக பிரிந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்காலத்தில் மீண்டும் கட்டியெழுப்ப அவர்கள் பாரியதொரு முயற்சியை எடுக்க வேண்டும் என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மிகப் பழமையான இரண்டு அரசியல் கட்சிகளாக, தற்போது சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி வைத்திருக்கும் அதிகாரத்தை பொதுமக்கள் தற்போது புரிந்துகொண்டிருப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.