யாழில் வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் (Jaffna) வியாதிகளின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (30) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி (70) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு பல்வேறு விதமான வியாதிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு | Elderly Woman Dies In Jaffna Due To Illness

இந்தநிலையில், வியாதியின் தாக்கம் தாங்க முடியாமல் நேற்றையதினம் (30) கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.