பிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து

பிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து

பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மற்றும் மாலைதீவின் துணை அரச தலைவர் பைசல் நசீம் ஆகியோர் ருவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். “அந்தப் பதிவில் உங்கள் அழைப்புகள் மற்றும் அன்பான வாழ்த்துக்களுக்காக நன்றி. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

இதேநேரம், பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி அழைப்பின் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை மக்களின் வலுவான ஆதரவோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற தான் தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அதில் குறிப்பிட்டுள்ளார்.