42 வருட அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல் - பரிதாப நிலையில் கட்சி

42 வருட அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல் - பரிதாப நிலையில் கட்சி

ஸ்ரீலங்காவில் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்து தற்போது அனைத்து முடிவுகளும் வெளிவந்துள்ளன.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,853,693 மொத்த வாக்குகளைப் பெற்று மொத்தம் 145 நாடாளுமன்ற இடங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

இதில் கொழும்பு மாவட்டத்தின் முடிவுகள் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது.

42 ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை பரிதாபமக உள்ளது.

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை என்பது அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது.

 

  • கொழும்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி,
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 674,603
  • ஐக்கிய மக்கள் சக்தி - 387,145
  • தேசிய மக்கள் சக்தி - 67,600
  • ஐக்கிய தேசிய கட்சி -30,875

 

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -1,709,209

அளிக்கப்பட்ட வாக்குகள் -1,263,810

செல்லுபடியான வாக்குகள்- 1,182,776

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -81,034